Tuesday, 6 December 2016

ஒலியுறுப்புகளின் தொழில்கள்


             1)      இதழ்

·          இதனை உதடு எனவும் கூறுவர். மேலிதழும், கீழிதலும் ஒலியுறுப்புக்களாகவும் பயன்படுகின்றன. இதழின் செயலால் ந்ழும் ஒலிகளை இதழொலிகள் என்கிறோம். கீழிதழையும் மேலிதழையும் பொருத்திக் காற்றை அடைத்துத் தடுத்து நிறுத்தலாம். இவற்றிடையே ஒரு சிறிய இடை வெளியை அமைத்துக் கொண்டு, அவ்விடைவெளி மூலம் காற்றைச் செலுத்தி அக்காற்றை அதிரச் செய்யலாம். வெளிவரும் காற்றில் இவ்விரண்டு இதழ்களையும் வேகமாக அதிரச் செய்யலாம். கீழிதழையும், மேற்பல்லையும் பொருத்தி அடைத்தோ, அவற்றிற்கிடையே இடைவெளியிட்டோ இத்தகைய ஒலிகளை எழுப்பலாம். இவ்வாறு எழு ஒலிகளைப் பல்லிதழ் ஒலிகளை என்போம். இரண்டு இதழ்களையும் வெளியே பிதுக்கி வைத்துக் கொண்டு எழுப்பும். ஒலிகளை இதழ் பிதுக்கொலிகள் என்பர்.
            2)      பல்
·         மேற்பல் வரிசையின் அடியிலிருந்து உள்நாக்கு வரையுள்ள கடினப்பகுதி அண்ணம். உள்நாக்கினை அடுத்திருக்கும் பகுதியை நுனியண்ணம் என்றும், அதற்கடுத்த பகுதியை இடையண்ணம் என்றும், அதற்கடுத்த பகுதியை கடையண்ணம் என்றும், அண்ணத்தை மூன்றாகப் பிரிக்கலாம். ஒலியுறுப்புகளில் மேல்தாடை அசையாது. கீழ்த்தாடையே அசையும்.
3        அண்ணம்
·         மேற்பல் வரிசையின் அடியிலிருந்து உள்நாக்கு வரையுள்ள கடினப் பகுதி அண்ணம். உள்நாக்கினை அடுத்திருக்கும் பகுதி மெதுவாக இருக்கும். மேற்பல் வரிசையை அடுத்திருக்கும் பகுதியை நுனியண்ணம் என்றும், அதற்கடுத்த பகுதியை கடையண்ணம் என்றும், அண்ணத்தை மூன்றாகப் பிரிக்கலாம். ஒலியுறுப்புகளில் மேல்தாடை அசையாது. கீழ்த்தாடையே அசையும்.
4)      நா
·         ஒலியுறுப்புகளில் வளையவும், நெளியவும், நீளவும், குறுகவும் ஆற்றலுடைய உறுப்பு இதுவேயாகும். நாவின் வெவ்வெறு பகுதிகள் வெவ்வெறு ஒலிகளை எழுப்பக் காரணமாய் இருக்கின்றன. ஆகையால், நாவை நுனிநா, நாவிளிம்பு, இடைநா, கடைநா, அடிநா எனப் பல பகுதிகளாகப் பிரித்துக் கூறலாம். நுனிநாவைப் பல், அண்ணத்தின் பல்வேறு இடங்கள், இவற்றோடு பொருத்திப் பல ஒலிகளை எழுப்பலாம். நுனிநாவின் உதவியால் எழும் ஒலிகளை நுனிநா ஒலிகள் எனலாம். நுனிநாவும் பல்லும் இணைவதால் எழும் ஒலிகள் நுனிநாப் பல்லொலிகள், நுனிநாவும் நுனியண்ணமும் இயைவதால் பிறக்கும் ஒலிகள் நுனிநா நுனியண்ண ஒலிகள். நுனிநாவும் இடையண்ணமும் இயைவதால் பிறக்கும் ஒலிகள் நுனிநா இடையண்ண ஒலிகள். நுனிநாவை மேல் கீழ் என்ற இரண்டு பற்களும் இடையில் வைத்து எழும்பும் ஒலிகள் நுனிநாப் பல்லிடை ஒலிகள் : இவற்றை முறையே பல்லொலி, நுனியண்ணவொலி, நாவளை ஒலி, பல்லிடை ஒலி என்றும் கூறுவர். இடைநாவும், இடையண்ணமும் இயைவதால் பிறக்கும் ஒலிகளை இடைநா இடையண்ண ஒலிகள் எனவும் கூறுவர், கடை நாவும் கடை அண்ணமும் இயைவதால் பிறக்கு ஒலிகளைக் கடைநா கடையண்ண ஒலிகள் எனக் கூறுவர்.
5)      உள்நாக்கு
·         வாயில் உள்ளே அடிப்பாகத்தில் தொங்கும் தசைப்பகுதி இது. இதனை வாயில் உள்ள காற்றினால் அதிரச் செய்யலாம். முன் தொண்டையிலிருந்து காற்று மூக்கறையின் உள்ளே செல்லும் வாயிலை, காற்றுக்குழல், உணவுக்குழல், வாய்ப்பாதை ஆகிய நான்கும் சந்திக்கின்றன.
6)      மூக்கறை
·         மூக்கறை வாயிலிருந்து மேல்நோக்கிச் சென்று, கீழே இறங்கி மூக்கில் முடிகிறது. காற்று மூக்கறை வாயிலாகச் செல்லும்போது எழும் ஒலிகளை மூக்கொலிகள் எனலாம். அப்பொழுது வாயை ஏதாவது ஒரு இடத்தில் அடைத்துக் கொள்கிறோம். அவ்வாறு அடைத்துக் கொள்ளாது காற்றை வாய் வழியாகவும், மூக்கறை வாயிலாகவும் வெளியிடும்பபோது எழும் ஒலிகளை மூக்கனிச் சாயல் பெற்ற ஒலிகள் எனலாம். மூக்கறை வாயிலின் கீழே பிறக்கும் எந்த ஒலியும், மூக்கொலியாகவோ, மூக்கினச் சாயல் பெற்றதாகவோ வெளிவர முடியாது.
7)      முந்தொண்டை
·         இங்குதான் மூக்கறை வாயில், காற்றுக்குழல், உணவுக்குழல், வாய்ப்பாதை ஆகிய நான்கும் சந்திக்கின்றன.
8)      ஒலித்தசைகள்
·         இவை மென்மையான இரண்டு தசைப்பகுதிகள், காதுஸ் என்பதால் கயிறு போன்று இருக்கும் என்று கருதுதல் வேண்டாம். இந்த இரண்டு தசைகளும் இடையே உள்ள வெளி ஒலித்தலை வாயில் எனப்படும். ஒலித்தசைகள் அகன்றிருக்கும் பொழுது இல்வாயில் வழியாகக் காற்று தங்கு தடையின்றிச் சென்று வரும். அப்பொழுது ஒலித்தசைகளும் எத்தகைய அதிர்வும் இன்றி இருக்கும். இப்படிப் பிறக்கும் ஒலிக்கு ஒலிப்பிலா ஒலி என்று பெயர். இல்வாயில் குறுகி இருந்து, அதன் வழியாகக் காற்றைச் செலுத்தி அக்காற்றால் இல்வொலித் தசைகளை அதிரச் செய்து, இல்வதிர்ச்சியுடன் பிறக்கும் ஒலி ஒலிப்புடை ஒலி எனப்படும்.
9)      குரல்வளை
·         காற்றுக்குழலில் ஒலித்தசைகள் இருக்கும் இது.
·         தொண்டை எனவும் கூறுவர்.
10)   குரல்வளை மடல்கள்
·         மென்மையான இரண்டு தசைப்பகுதி.
·         ஒலித்தசைகள் அகன்றிருக்கும் பொழுது இவ்வாயில் வழியாகக் காற்று தடையின்றி செல்லும்.
11)  நுறையீரல்
·         நுரையீரல்கள், உதரவிதானம், விலாவெலும்பிலுள்ள தசைநார்கள் இவற்றின் செயலால் விரியவும், சுருங்கவும் செய்கின்றன. விரியும்பொழுது உள்ளே சென்ற காற்று, அவை சுருங்கும் பொழுது வெளியே வருகிறது. ஒரு உள்மூச்சும் ஒரு வெளிமூச்சும் சேர்ந்து ஒரு தடவக் சுவாசித்தல் ஆகும். இது ஒழுங்கான இடையீட்டோடு நிகழுகிறது. இதைத்தான் நாடித் துடிப்பு என்கிறோம். பேச்சில் ஒவ்வொரு அசையாக வெளி வருகிறது.






No comments:

Post a Comment

Strategi, kaedah (metadologi)

Powerpoint presentation          ⇓ Click here