மெய்யொலிகள்
தமிழில் மெய்யொலிகள் 18 உள்ளன. அவை க்,ச்,த்,ப்,ற்
(வல்லொலிகள்), ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் (மெல்லின ஒலிகள்), ய்,ர்,வ்,ழ்,ள் (இடையின் ஒலிகள்)
ஆகும். இவற்றுள், வல்லெழுத்துகள் ‘ற்’ தவிர்த்து மற்ற அனைத்தும் வெடிப்பொலி அல்லது
தடையொலி என்றும், மெல்லினவெழுத்துகள் அனைத்தும் மூக்கொலிகள் என்றும், ‘ல்’, ‘ழ்’,
‘ள்’ ஆகிய எழுத்துகள் பிரிவளிடியொலிகள் அல்லது மருங்கொலி என்றும் ‘ர்’ வருடொலி என்றும்
குறிப்பிடுவர்.
மெய்யொலிகளைப் பொறுத்த மட்டிலும் காற்று பல வகைகளிலும்
மாறுபட்டு மாறுதல்களும் உட்படுத்தப்பட்டு பிறப்பிக்கப்படுகின்றன. பிறக்கும் முறையையும்
இடத்தையும் பொறுத்தே இவை பெயரிடப்படுகின்றன. சில வேளைகளில் பிறக்கும் முறையைக் கொண்டு
இவை பெயரிடப்படுகின்றன. குரல்வளை மடல்களின் அசைவு அடிப்படையில் இவை ஒலிப்புடை, ஒலிப்பிலா
மெய்கள் எனப் பெயர் பெறுகின்றன.
மூக்கொலிகள்
அடைப்பொலி
போலபே அமைந்து அண்ணக்கடை திறந்து மூக்கறை வழியே மூச்சுக் காற்று வெளியே செல்லும்போது
மூக்கொலி அல்லது மெல்லினம் தோன்றும். மெரும்பாலும் மூக்கொலி உண்டாக்கும்போது குரல்வளை
அதிர்கின்றன. (ங, ஞ, ண, ந, ம, ன) போன்ற ஒலிகள் பிறக்கின்றன.
No comments:
Post a Comment