1) ங் - குரலுடை கடைநா கடையண்ண மூக்கொலி
·
குரல்வளை மடல்கள் மூச்சுக்காற்று தாக்கத்தால் அதிர்ந்து கடையண்ணமும் கடைநாவும்
பொருந்த, மூச்சுக்காற்று தடை செய்யப்பட்டு மூக்கறை வழியே வெளியேறுவது ங - கரம் ஆகும். இது அடி நாக்கு மேல்வாயின் அடிப்புறத்தைத் தொடுவதால் பிறக்கின்றன.
2) ஞ் - குரலுடை இடைநா இடையண்ண மூக்கொலி
·
குரல்வளை மடல்கள் மூச்சுக்காற்று
தாக்கத்தால் அதிர்கின்ற நிலையில் இடையண்ணமும் இடைநாவும் பொருந்த அண்ணக்கடை திறந்த மூக்கறை
வழியே மூச்சுக்காற்று வெளியே செல்ல ஞ - கரம் தோன்றும். இது மேல் வாயின் நடுவிடத்தை
அடி நாக்குத் தொடுவதால் பிறக்கின்றன.
3) ண் - குரலுடை நாமடி மூக்கொலி
•
குரல்வளை மடல்கள் மூச்சுக்காற்று
தாக்கத்தால் அதிர்கின்ற நிலையில் நாமுனையின் பிற்பகுதி மடிந்து அண்ணத்தை பொருந்த மூக்கறை
வழியே பிறப்பது ண – கரம். இது நுனி நாக்கு மேல் வாயின் இடையண்ணதைத் தொடுவதால் பிறக்கின்றன.
4) ந் - குரலுடை நுனிநா அன்பால் மூக்கொலி
·
குரல்வளை
மடல்கள் மூச்சுக்காற்று தாக்கத்தால் அதிர்கின்ற நிலையில் மேற்பல்லை நாநுனி பரந்து மேற்பல்லை
ஒற்ற, மூச்சுக்காற்று அண்ணக்கடை திறந்த மூக்கறை வழியே பிறப்பது ந - கரம். இது நாக்கின்
நுனி மேல் வாய்ப்பல்லின் அடிப்புறத்தைத் தொடுவதால் பிறக்கின்றன.
5) ம் - குரலுடை ஈரிதழ் மூக்கொலி
- குரல்வளை மடல்கள் மூச்சுக்காற்று தாக்கத்தால் அதிர்கின்ற நிலையில் இரண்டு இதழ்களும் இயைந்து பொருத்த அண்ணக்கடை திறந்த முக்கறை வழியே மூச்சுக்காற்று வெளியே செல்லும்போது பிறக்கும் ம - கரம் ஆகும். இது மேலுதடும் கிழுதடும் ஒன்று சேர்வதானால் பிறக்கின்றன.
No comments:
Post a Comment